Tuesday, March 17, 2026
HomeSportRain Alert | இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!...

Rain Alert | இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:

வெப்பநிலையை பொறுத்த வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் – வானிலை மையம்

வானிலை நிலவரம்
வானிலை நிலவரம்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதேபோன்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், வடக்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நாளையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் நாளை மறுநாள் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலையை பொறுத்த வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

Suhas
Suhashttps://onlinemaharashtra.com/
Suhas Bhokare is a journalist covering News for https://onlinemaharashtra.com/
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments