மீனம்: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. உங்கள் ராசிக்குப் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் இடங்களுக்கு உரியவரான சனிபகவான், தற்போதைய பெயர்ச்சியில் உங்கள் ஜன்ம ஸ்தானமான மீனம் ராசிக்கே வருகிறார். ஏழரை சனியில் இது ஜன்ம சனி என்பதை நினைவில் வையுங்கள். அகலக்கால் வைக்காமலும் அமைதியாகவும் செயல்பட்டால் அனைத்திலும் நன்மையே கிட்டும்.அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாது. பொறுப்புடன் பணி செய்தால், பதவி, ஊதிய உயர்வுகளில் இருந்த தடை நீங்கும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பும் அதனால் ஆதாயமும் பெருகும். அதேசமயம் வீண் சலிப்பு, புலம்பல் தவிர்ப்பதும், யாரையும் உதாசீனப்படுத்தாமல் இருப்பதும் நல்லது. வீட்டில் சுடுசொல் தவிர்த்தால், சுபிட்சம் நிலவும். விட்டுக்கொடுத்தால், விசேஷங்கள் அடுத்தடுத்து வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசினால், அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு பெரியமனிதர்கள் நட்பும் அதனால் ஆதாயமும் கிட்டும். அடிவயிறு, உணவுக்குழாய், அல்சர் உபாதைகள் வரலாம். நாமக்கல் அனுமனை தரிசித்து வருவது, நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
Sani Peyarchi 2026 | சனிப்பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்கு கண்டம்.. உங்க ராசி இருக்கானு தெரிஞ்சுக்கோங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி
By Suhas
0
4
Suhashttps://onlinemaharashtra.com/
Suhas Bhokare is a journalist covering News for https://onlinemaharashtra.com/
RELATED ARTICLES
