Thursday, February 26, 2026
HomeTechnologyடி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேயை எதிர்கொள்ளும் முன்னரே இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்

டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேயை எதிர்கொள்ளும் முன்னரே இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்

டி20 உலகக்கோப்பை, இந்தியா, ஜிம்பாப்வே, சூப்பர் 8

பட மூலாதாரம், Getty Images

2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று (பிப்ரவரி 26) நடக்கும் முக்கியமான போட்டியில் ஜிம்பாப்வே அணியை சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது இந்திய அணி. முந்தைய போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோற்றிருந்த நிலையில், இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. அதன் பிறகு பல விஷயங்கள் ரசிகர்களாலும் வல்லுநர்களாலும் விமர்சிக்கப்பட்டன. துணைக் கேப்டன் அக்சர் பட்டேலை அணியில் சேர்க்காதது, அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் ஃபார்ம் போன்றவை பெரும் பேசுபொருளாகின. அதனால் இந்தப் போட்டியில் இந்த வீரர்கள் விஷயத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அபிஷேக் ஷர்மா 4 போட்டிகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். 5 போட்டிகளில் ஆடியிருக்கும் திலக் வர்மா 118.9 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 107 ரன்கள் எடுத்திருக்கிறார். ரிங்கு சிங் 5 போட்டிகளில் 24 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இருப்பதால், இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற வாதம் எழுந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், டாப் 3 வீரர்கள் மூவருமே இடது கை பேட்டர்களாக இருப்பதால், எதிரணிகள் ஆஃப் ஸ்பின்னர்களோடு போட்டியைத் தொடக்கி சவால் கொடுக்கின்றன. சாம்சனை சேர்ப்பது அந்த பிரச்னைக்கும் முடிவு கட்டும் என்று கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்பே இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இதை வலியுறுத்தியிருந்தார். தன் எக்ஸ் தள பதிவில், “டாப் ஆர்டரில் அதிக இடது கை பேட்டர்கள் இருப்பது, எதிரணிகள் நன்கு திட்டமிட்டு ஆஃப் ஸ்பின்னர்களை ‘மேட்ச் அப்’களாக பயன்படுத்த உதவிவிடுகின்றன. சாம்சனை சேர்ப்பது அதை சரிசெய்யும்” என்று எழுதியிருந்தார்.

Suhas
Suhashttps://onlinemaharashtra.com/
Suhas Bhokare is a journalist covering News for https://onlinemaharashtra.com/
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Tutorial de trading en gate.io on Insurance Agency Lead Scoring