Thursday, March 5, 2026
HomeTechnologyசட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த ஆளுநர்! மேற்குவங்கத்திற்கு செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவி...

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த ஆளுநர்! மேற்குவங்கத்திற்கு செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவி | India News (இந்தியா செய்திகள்)

Last Updated:

மேற்குவங்கம் ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் பதவியை ராஜினாமா செய்தார். ஆர்.என். ரவி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News18
News18

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் மேற்குவங்கத்தின் ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் மேற்குவங்கத்தில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தின் ஆளுநராக சி.என். ஆனந்த் போஸ், மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் சர்ச்சைகளைப் போலவே மேற்குவங்கம் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயும் சர்ச்சைகளும், சலசலப்புகளும் இருந்துவருகின்றன.

இந்த 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு தேர்தல் வரவிருக்கிறது. இந்தச் சூழலில் மேற்குவங்கம் மாநிலத்தின் ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.

இந்தச் சமயத்தில் மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில், “சி.வி. ஆனந்த் போஸ் தனது ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணத்தை இதுவரை எனக்கு தெரியப்படுத்தவில்லை.

மேலும், ஆர்.என். ரவி, மேற்குவங்கம் ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் எனக்குத் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக என்னிடம் எந்த ஒரு கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Suhas
Suhashttps://onlinemaharashtra.com/
Suhas Bhokare is a journalist covering News for https://onlinemaharashtra.com/
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments